சென்னை

நடிகர் சங்க தலைவ நாசர் மீது நாசரின் சகோதரர் சரமாரியாக குற்றசாட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரும் இயக்குனருமான நாசரின் மனைவி கமீலா நாசர் ஒரு சமூக நல தொண்டர் ஆவார், இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்களவை தேர்தல் வேட்பாளர் ஆவார். நாசருடைய சகோதரர் ஜவகர் என்பவர் நாசரும் அவர் மனைவியும்  தனது தாய் தந்தையரை கவனிக்கவில்லை என குற்றம் சாட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவின் விவரம் வருமாறு.

நாசர் சாயலில் உள்ள ஒரு நபர், “நான் நடிகர் நாசருடைய கூடப் பிறந்த சொந்த தம்பி. எனது பெயர் ஜவகர். நடிகர் நாசர் மிகவும் பெரிய நடிகர். அவர் இந்த அளவுக்கு வளர்ந்த போதிலும் அவருடைய தாய் தந்தையர சுத்தமாக கவனித்ததில்லை. சுமார் 25 வருடங்களாக தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா என்பது குறித்து கூட அவர் யோசனையும் செய்யவில்லை.

அவருடைய மூன்று குழந்தைகளுக்கும் அவர் தனது பெற்றோரை அறிமுகம் கூட செய்யவில்லை.. அநேகமாக இந்த 25 வருடங்களில் ஓரிரு முறைதான் அவர்கள் இங்கு வந்துள்ளனர். அதற்கு பிறகு அந்த குழந்தைகளை  நானோ எனது பெற்றோரோ பார்த்தது கூட கிடையாது. மேடையில் நாசர் ஒரு தலை சிறந்த அறிவாளியாக உரையாற்றுகிறார். அப்படி இருக்க அவர் ஏன் தனது பெற்றோரை கவனிக்கவில்லை?

ஒருமுறை எனக்கும் நாசருடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தினால் நான் இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு எடுத்துச் சென்றேன். அங்குள்ளவர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லை. அவர் நல்லவர் மற்றும் வல்லவர் எனக் கூறி என்னை அனுப்பி வைத்துள்ளனர். எனக்கு இது குறித்து யாருடன் முறையிடுவது என தெரியவில்லை.

தற்போது தேர்தலில் கமீலா நாசர் மக்களவை தேர்தலில் மத்திய சென்னையில் கமலஹசானின் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட உள்ளார். கமீலா தனது மாமனார், மாமியார் மற்றும் மன வளர்ச்சி குன்றிய ஒருவருக்கு உதவாமல் உள்ளார். அப்ப்படி இருக்கையில் அவர் நாட்டுக்கு எவ்விதம் உதவுவார்?

இதை அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் கமீலாவுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை குறித்து நீங்கள் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து நான் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் விவரிக்கிறேன். தற்போது இது குறித்து சிறிய தகவல் அளித்துள்ளேன்.

அவசியம் நீங்கள் வாக்களியுங்கள். ஆனால் தாய் தந்தையரை நேசிக்கும் நீங்கள் கமிலா நாசருக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதைசிந்தித்து வாக்களியுங்கள். நீங்கள் அனைவரும் என் உடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என கூறி உள்ளார்.