உலகின் முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. கூழாங்கல் படத்துக்கு Pebbles என சர்வதேச பெயர் அளித்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தப் பெயரில்தான் கூழாங்கல் திரையிடப்படுகிறது.
இந்தப் படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெற்றுள்ளது.
ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது.
இந்த நிலையில் தற்போது கூழாங்கல் படம் இத்தாலியில் நடந்த சார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது.