
சிவா இயக்கத்தில் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்து வாக்குல் ரெண்டு காதல் & இயக்குனர் அட்லி இயக்கும் பாலிவுட் திரைப்படம் என பல திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.
அடுத்ததாக நேரம் மற்றும் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தயாராகும் கோல்ட் படத்தில் நடிக்கிறார். நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். பிரித்திவிராஜ் புரோடக்சன்ஸ் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோல்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
#LadySuperStar #Nayanthara Joined Alphonse Putharen Film #Gold ♥️
Exclusive Picture With ThesniKhan Ma'am 😍 #Nayanthara #Prithviraj #Ajmal #Thesnikhan #AlphonsePutharen pic.twitter.com/IfSW2ddsH5
— Nayanthara (@nayantharra) September 13, 2021