மீண்டும் த்ரில்லர் படத்தில் நயன்தாரா

Must read

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. அவர் தற்போது டோரா, அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ளார். இப்படத்தை ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் பத்திரிக்கையாளராக இருக்கும் நயன்தாரா தான் யார், தன் குடும்பங்கள் யார் என தெரிந்துகொள்ள பல நாடுகளுக்கு பயணிக்கிறார். முடிவில் கண்டுபிடித்தாரா என்பது என்பதே படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பை 2017 மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கிறார்கள்.

More articles

Latest article