வட நாட்டு அரசியலில் குதித்து எம் பி ஆன தமிழ் நடிகைக்கு கொரோனா..

Must read

மிழ் படங்களில் நடித்திருக்கும் விஜயசாந்தி, ரோஜா, குஷ்பு, கவுதமி , காயத்ரி ரகுராம் என பல நடிகைகள் அரசியலில் குதித்திருக்கின்றனர். குஷ்பு, கவுதமி, காயத்ரி ஆகியோர் தமிழ்நாட்டு அரசிய லில் உள்ளனர். விஜயசாந்தி, ரோஜா ஆந்திர அரசிய லில் உள்ளனர். அதேபோல் தமிழில் ராஜாங்கம், அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த நவ்னீத் கவுர் வடநாட்டு அரசியலில் உள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் நவ்னீத் கவுர். இவர் ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் எம் எல் ஏ வாக இருக்கிறார். நவ்னீத் கவுர் குடும்பத்தினருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது.
அதில் அவரது மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் நவ்னீத் கவுருக்கு பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை. வழக்கம்போல் அவர் தனது பணிகளை செய்து வந்தார். அவருக்கு மீண்டும் சமீபத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது, இதை நவ்னீத் கவுரும் தனது இணைய தள பக்கத்தில் உறுதி செய்திருக் கிறார். தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

More articles

Latest article