டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று  6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில்  உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியுடன் வந்தார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வாங்கியது தொடர்பான வழக்கில் ஏற்கனவே ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது. முதல்நாள் விசாரணை சுமார் 2மணி நேரம் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 2வது நாளான நேற்றைய (26ந்தேதி) விசாரணை 6மணி நேரம் நடைபெற்றது. இந்த இருநாள் விசாரணைகளின்போது, ராகுலிடம் கேட்டகப்பட்ட கேள்விகள்தான் சோனியாவிடமும் கேட்கப்பட்டதாகவும், இதுவரை 55 கேள்விகள் கேட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்த நிலையில் இன்று 3வது நாளாக சோனியாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய டெல்லியின் ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள வித்யுத் லேனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  முன்னதாக, சோனியாவை விசாரணைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின்  பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ர். இதனால்  சோனியா காந்தி செல்லும் சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.