டெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியவர்களை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற்ம தீர்ப்பு வழங்கி உள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) நபர்களை கைது செய்து சம்மன் அனுப்ப அமலாக்க இயக்குனரகத்தின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கறுப்பு பணம் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறையில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை கைது செய்வதை எதிர்த்து,  தொடர்பாக மெகபூபா முப்தி, கார்த்திக் சிதம்பரம் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். பிஎம்எல்ஏ சட்டத்தில் உள்ள சில விதிகளை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுமீது உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வால்கர் தலைமையிலான அமர்வு  விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில், அமலாக்கத்துறை, ஆதாரங்களை தெரிவிக்காமல் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்வ தற்கான தடையற்ற அதிகாரம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று  தெரிவிக்கப்பட்டது. வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வால்கர் தலைமையிலான அமர்வு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் உடனே கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று  தீர்ப்பளித்தது.  ஒவ்வொரு வழக்கிலும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (இ.சி.ஐ.ஆர்.) வழங்குவது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ள நீதிபதிகள்,  அமலாக்கத்துறை கைது செய்யும்போது ஆதாரங்களை வெளிப்படுத்தினால் போதும் என்று  தெரிவித்துள்ளது.

“ED அதிகாரிகள் CrPCஇன் கீழ் போலீஸ் அதிகாரிகள் அல்ல. ED அதிகாரிகள் முன் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் ஆதாரமாக கொண்டு அவர்கள் கைது செய்வது செல்லுபடியாகும்” என்று பெஞ்ச் கூறியது.

அத்துடன் மனுதாரர்கள் கேள்வி எழுப்பிய சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் முக்கியமான பிரிவுகளை நீதிபதிகள் உறுதிப்படுத்தி யதுடன், சட்டத்தின் கீழ் ஜாமீனுக்கான இரட்டை விதிகள் சட்டப்பூர்வமானது மற்றும் தன்னிச்சையானது அல்ல என்று கூறியது.  எவ்வாறாயினும், அரசாங்கம் இந்தச் சட்டத்தை பாதுகாத்து, இது ஒரு சிறப்புச் சட்டம் என்றும் அதில் அதன் சொந்த நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளது.

பணமோசடி என்பது நாட்டின் பொருளாதார வலிமைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும், அதைக் கையாள்வதற்கு கடுமையான ஆட்சியை வழங்கவும் மத்திய அரசு முயன்று வருகிறது என்று கூறிய நீதிபதிகள்,  பி.எம்.எல்.ஏ-வில் சில திருத்தங்கள் நிதிச் சட்டத்திற்கு எதிரானதா  என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்கவில்லை.