திருவனந்தபுரம்

கேரளாவில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படை அங்கு விரைகிறது

தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாகக் கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கேரள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.  கனமழை எச்சரிக்கை காரணமாக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

அதன்[அடி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து கேரளாவிற்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைகிறது. இங்கு மீட்புப்பணியில் ஈடுபட ஏதுவாக ஒரு குழுவிற்கு 25 பேர் என 175 பேர் கொண்ட 7 குழுக்கள் கேரளா சென்றுள்ளது.