
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘பிச்சைக்காரன்’.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரீமேக் ஆகி, வசூலை வாரி குவித்தது
‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் விஜய் ஆண்டனி.
‘பிச்சைக்காரன் 2’ படத்தின் திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதியிருந்தார். சசியே இந்த திரைப்படத்தையும் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், தேசிய விருது பெற்ற ‘பாரம்’ பட இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இந்த படத்தை இயக்குவார் என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக இந்த திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளார் பிரியா கிருஷ்ணசாமி.
தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் ஆனந்த கிருஷ்ணனே ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.