திரையரங்கில் தேசியகீதம் தேவையா?
திரையரங்கில் தேசியகீதம் தேவையா?

நெட்டிசன்:

சந்துருமாணிக்கவாசகம் (Chandru Manickavasagam)  அவர்களின் முகநூல் பதிவு:

மரியாதை, அவமரியாதை, தகராறு, போலீஸ்..

நேற்று Palazzo திரையரங்கில் சிறந்தபடமான ‘Glory’ -க்காக (பல்கேரிய நாட்டு திரைப்படம்) அமர்ந்திருந்தோம். தேசியகீதம் இசைக்கப்பட்டதும் அனைவரும் எழுந்துநின்றுவிட,  இரண்டு பெண்களும், ஒரு இளைஞரும் வலுவாக இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் (இன்றைய தினசரியில் அவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.  சுபஸ்ரீ,  ஷீலா மற்றும் பிஜேன்).

தேசியகீதம் முடிந்ததும் அவர்களை திரையரங்கை விட்டு  வெளியேற்றும் பிரச்சனை ஆரம்பமானது .இதற்கு பலர் ஆதரவு தெரிவிக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, ஆங்காங்கே கோஷ்டி தகராறாக இப்பிரச்சனை மாற்றம்பெற்றது .இறுதியில் இரண்டு போலீஸார்வந்தனர். அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு அந்த இளைஞனை ப்பார்த்துகாவலர், ‘யோவ், ஜப்பான்லேயெல்லாம் திருடன்கூட தேசியகீதத்துக்கு எழுந்துருச்சுநிக்கிறான்யா..உனக்கென்ன..?’ என்றார். அரங்கிலிருந்தவர்களின் சம்மதத்துடன் அவர்கள்மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் திரும்பிச்சென்றனர். இந்த கோபத்தில் சிலர் திரையரங்கைவிட்டு வெளியேறினர்.

படம் ஆரம்பித்த அடுத்த அரைமணிநேரத்தில் உயர் போலீஸ் அதிகாரியுடன் காவலர்கள் உள்ளேநுழைந்தனர். படம்நிறுத்தப்பட்டு அந்த நபர்கள் வழக்கிற்காக அழைத்து ச்செல்ல ப்பட்டனர். அவர்களுக்காக ஆதரவுதெரிவித்து போராடிய மேலும்நான் குஇளைஞர்களும் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கபயந்த வர்கள்வாய் மூடி அமைதிகாத்து ‘எஸ்கேப்’ ஆனார்கள். படம் மீண்டும் துவங்கியது.

படித்த இளைஞர்கள்கூடியிருந்த இந்ததிரைப்பட விழா அரங்கில் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்கவைக்க முடிந்தவர்களால், பொதுமக்கள்கூடும் திரையரங்குகளில் இவ்வளவு வலிமையாக எதிர்ப்புதெரிவிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியே..

இப்படி திரையரங்குகளில் தேசியகீதத்தை இசைக்கவைத்து அவமரியாதைக்கான வாய்ப்பையும் மக்களிடையே பிரச்சனைகளையும் உருவாக்குவது தேவை தானா என்பதை மத்திய அரசுபரிசீலனை செய்வதுநல்லது.  பள்ளி,  கல்லூரி,  அரசு அலுவலகங்கள்,  விழாக்கள், நீதிமன்றங்கள் போன்ற இடங்களோடு நிறுத்திக்கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.