குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகா சபையினர் சிலை வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த சிலையை உடைத்தெறிந்தனர்.
ஜாம்நகர் நகர காங்கிரஸ் தலைவர் திகுபா ஜடேஜா தலைமையில் சிலை வைக்கப்பட்டிருந்த அனுமன் ஆசிரமத்திரத்திற்கு சென்ற காங்கிரசார் முன்னிலையில் திகுபா ஜடேஜா அந்த சிலையை தகர்தெறிந்தார்.
ஜாம்நகரின் முக்கிய பகுதியில் சிலை வைக்க இந்து மகாசபை வைத்த கோரிக்கையை ஏற்க நகராட்சி நிர்வாகத்தினர் மறுத்த நிலையில் அந்த சிலையை அனுமன் ஆசிரமத்தில் நிறுவினர்.
ஆகஸ்ட் மாதமே சிலை நிறுவ முயற்சி நடந்த நிலையில் சிலை செய்வதற்கான மண்ணை கொலைகாரன் நாதுராம் கோட்சே அடைக்கப்பட்டிருந்த ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மத்திய சிறையில் இருந்து எடுத்து வந்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோன்ற சிலையை மத்திய பிரதேசத்திலும் நிறுவ இந்து மகாசபையினர் முயன்று வருவதால் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு மகாத்மா காந்திக்கு கலங்கம் ஏற்படுத்தும் இந்து மகாசபையினரை கண்டிக்கவும் ஹரியானா சிறைக்குள் சென்று மண் எடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை கைது செய்யவும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.