ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி

Must read

டாக்கா:
ங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்திய ரிகர்வ் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இன்று ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 இல் அந்தந்த நிகழ்வுகளின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிகழ்வில் குறைந்தது மூன்று பதக்கங்களை நாட்டிற்கு உறுதி செய்தது. இந்தியா மூன்று போட்டிகளிலும் தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் முதலிடத்தில் உள்ள கொரியாவை எதிர்கொள்கிறது. மேலும் மூன்று வெண்கலப் பதக்கப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.

More articles

Latest article