காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகியதாக சொல்லப்படும் தகவல் தவறு. அவர் சாகும்வரை ஆர்.எஸ்.எஸ்காரரே என கோட்சேயின் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காந்தி கொலையில் நாதுராம் கோட்சேயுடன்  குற்றவாளியாக கருதப்படுபவர், அவரது  தம்பியான கோபால் கோட்சே ஆவார்.  இவரது மகள் வயிற்றுப் பேரன் சத்யாகி சவர்க்கார்,  கணினி  துறையில் பணியாற்றுகிறார். இவர் இந்துமஹாசபை எனும் அமைப்பை நடத்திவருகிறார்.

கோட்சே - காந்தி
கோட்சே – காந்தி

இவர் காந்தி கொலை பற்றி கூறும்போது , “எனது தாத்தாவான நாதுராம் கோட்சே 1932-இல் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார்.  அன்றிலிருந்து, தான் சாகும்வரை
சத்யாகி சவர்க்கார்
சத்யாகி சவர்க்கார்

ஆர்.எஸ்.எஸ்.காரராகவே விளங்கினார்.  அந்த அமைப்பை விட்டு அவர், விலகியதில்லை. அந்த அமைப்புக்கு அவர் மிக உண்மையாக பணியாற்றினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து அவர் விலகியதாக கூறப்படுவது துரதிருஷ்டமானது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காந்திக் கொலை செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது . ஆனால் அதற்காக அவர்கள் உண்மைகளை விட்டு எங்கும் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது”  என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்யாகி சவர்க்காரின் தாயார் ஹிமானி சவர்க்காரும் தீவிர இந்துத்துவவாதியாவார். இவருக்கு மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக் சந்தேகிக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு காலமானார்.