உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாலர் வி.கே. சசிகாலா நாளை பரலோலில் சென்னை வருகிறார் என்று தகவல் பரவியுள்ளது.
புதிய பார்வை ஆசிரியரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உடல்நலமில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடராஜனுக்கு, நேற்று திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளிங்லஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“கல்லீரல் செயல் இழந்துள்ளது. மேலும் கிட்னியும் செயல் இழந்துவிட்டது. அதோடு நுரையீரலும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அவர் காரணமாக மூச்சு விட கஷ்டப்பட்டு வருகிறார். தற்போது அவர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டயாலிஸ் மற்றும் தேவையான சிகிச்சைகள் மேற்கொள்பபட்டு வருகிறது” என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் முகமது ரேலா தலைமையில் கல்லீரல் நிபுணர்கள், பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவ குழுவினர் நடராஜனை கவனித்து வருவதாகவும், லண்டனில் இருந்து மருத்துவர் ஒருவர் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக தமிழ்நாடு ஆர்கனைசேஷன் (டி.என்.ஓ.எஸ்) அமைப்பில் காத்திருக்கும் பட்டியலில் நடராஜன் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார் என்பது உறுதி ஆகியுள்ளது.
இதற்கிடையே உறவினர் ஒருவர் கல்லீரல் தானம் அளிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடராஜனின் மனைவி வி.கே. சசிகலா நாளை சென்னை வந்து கணவரை பார்ப்பார் என்று தகவல் பரவியுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பரோலுக்கு அவர் விண்ணப்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் சென்னைக்கு வந்து கணவரை பார்ப்பார் என்றும் கூறப்படுகிறது.