மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிகப்பு வெங்காய விளைச்சலுக்கு புகழ்பெற்றது. நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 30 சதவீத வெங்காயம் நாசிக்கில் உற்பத்தியாகிறது. நிலையான விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் செலவு தொகையை எடுக்கவே மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

இந்த ஆண்டு நாசிக்கில் வெங்காயம் அமோக விளைச்சலை கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக உற்பத்தி கிடைத்துள்ளது. இந்த வெங்காயத்தை விரைந்து சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் 3 சரக்கு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது.

தற்போது கூடுதலாக மேலும் ஒரு சரக்கு ரெயிலை இயக்க ரயில்வே அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எ டுக்கப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ரயிலில் இன்று முதல் விவசாயிகள் வெங்காயத்தை ஏற்றலாம். நாட்டின் வடக்கு, கிழக்கு, கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.