நாசிக்: முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து விமர்சித்த மத்தியஅமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்த நாசிக் போலீசார், செப்டம்பர் 2ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்குகொண்ட மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ்தாக்கரேக்கு நடப்பாண்டு, நாட்டின் எத்தனாவது சுதந்திர தினம் என்பது குறித்து தெரியவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு நாட்டின் சுதந்திர தினம் கூட தெரியாதா என விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே, இந்த நிகழ்வின்போது நான் உடன் இருந்திருந்தால், உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையைனது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதை வேடிக்கை பார்த்த உத்தவ் தாக்கரே அரசு, மாநில போலீசைக்கொண்டு மத்திய அமைச்சரை நேற்று கைது செய்தது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மத்திய அமைச்சர் சார்பில் உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடத்து, நாராயண் ராணேவுக்கு ரூ. 15,000 பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. தனி நபர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே செப்டம்பர் 2-ம் தேதி,காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நாசிக் காவல் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.100கோடி மாமுல் விவகாரம்: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில்தேஷ்முக் சொந்தமான இடங்களில் ரெய்டு…