மும்பையைச் சேர்ந்த  நரசிங் யாதவ் ஒரு இந்திய மல்யுத்த வீரர்.
narsingh
கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நரசிங் யாதவ்  ஒரு வெண்கலப் பதக்கம் வென்றதால்  ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.  இந்தியாவின் சார்பாக இரண்டாவது முறையாக கோடைக்கால  ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற போகின்ற உற்சாகத்தில் இருந்த இவரது கனவில் மண் விழுந்தது.
தேசிய போதைபொருள் எதிர்ப்பு அமைப்பான ” நாடா (NADA)”, ஜூன் 25 ம் தேதி நரசிங் யாதவின் ரத்த மாதிரியை சோதனை நடத்தியது .   பரிசோதனையில்  நரசிங் யாதவ்  தடை செய்யப்பட்ட மருந்து உட்கொண்டதாக முதலில் முடிவு வந்தது. இவர் தான் குற்றமற்றவர் என முறையீடு செய்தார்.  ஜூலை ஐந்தாம் தேதி நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையிலும் இவருக்கு பாதகமாகவே முடிவு வந்தது.
இருப்பினும் இவரது வழக்கறிஞர்கள் போலிசில் புகார் அளித்தும்,ஒலிம்பிக் சம்மேளனம் கொடுத்த அழுத்தத்தினாலும்,  தற்போது நரசிங் யாதவ்   ரியோ ஒலிம்பிப் போட்டியில் கலந்துக் கொள்வதற்கு இருந்த தடையை விலக்கி உத்தரவிட்டுள்ளது நாடா (NADA) அமைப்பு.
திங்களன்று நாடா (NADA) ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்களில் இருந்து மல்யுத்த நரசிங் யாதவ் விடுவித்தது.
“நரசிங்  மீது எந்த  தவறோ  அலட்சியமோ  இல்லை.   அவரது சக போட்டியாளர் ஒருவர் செய்த  நாசவேலையால்  நரசிங்  பாதிக்கப்பட்டார்”  என   நாடா அமைப்பின் தலைவர்  நவீன் அகர்வால் கூறினார்.

“பயிற்சியின் போது வழங்கப்படும் குளிர்பானங்களை வீரர்களால் சோதித்து பார்க்க முடியாது. எனவே,  இதில் வீரரின் தவறு இல்லை. வேண்டுமென்றே இவரை சிக்க வைக்க இவரது சக போட்டியாளர் சதி செய்ததன் சந்தேகத்தின் அனுகூலத்தால்   இவரது ஒலிம்பிக் கனவு நனவாகியுள்ளது.