கொல்கத்தா: சுவாமி சிவானந்தாவிற்கு வயது 120. சமீபத்தில், அவருக்குத் திடீரென முதல் முறையாகத் தலைவலி ஏற்பட்டது. இதனால் அவரது பக்தர்கள் பதற்றமடைந்தனர். அவரை முழு உடற்பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். சுவாமிஜி எவ்வளவோ மறுத்தும் அவரை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்தனர். அது தான் அவரது வாழ்வின் முதல் மருத்துவ பரிசோதனை ஆகும்.
swami sivananda
சனிக்கிழமையன்று துறவி சிவானந்தா எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் இருந்து வெளிவந்தபோது மருத்துவர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். சுவாமி சிவானந்தா வின் இதயத் துடிப்பு முற்றிலும் நன்றாக உள்ளது.
தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் துறவி சிவானந்தாவின் மன உற்சாகம் மற்றும் உடல் சுறுசுறுப்பு கண்டு வியப்படைந்துள்ளனர். அவர் சர்வாங்காசனம் செய்து காட்டியபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
சோதனை முடிவில், அவருக்கு வெறும் உயர் இரத்த அழுத்தம் மட்டுமே காணப்பட்டது. அவர் அதனைச் சரிசெய்துகொள்ள ஐந்து நாள் அவகாசம் கேட்டுள்ளார்.
வயதில் மூத்தவர்:
சுவாமி சிவானந்தா  பெஹல்லாவில் பிறந்தவ்ர். சுவாமி சிவானந்தாவின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையில் உள்ளபடி அவரது வயது 120. ஆனால் அவர் கன்னங்களில் தோல் சுருக்கத்தைக் காணமுடியவில்லை. அவர் 50 ஆண்டுகள் இளையவராய்த் தெரிகிறார்.
உண்மையில், அவர் இப்போது கின்னஸ் சாதனைக்குச்  சொந்தக்காரனான ஜப்பான் நாட்டின் ஜிரொமோன் கிமுரா (இவரது பிறந்த தேதியை கின்னஸ் குழு உறுதிப்படுத்தியுள்ளது) விடச் சுமார் ஐந்து ஆண்டுகள் மூத்தவர் ஆவார்.

ஜிரோமோன் கிமுரா (1897 – 2013)

உல்லாச வாழ்க்கை வாழும் போலிச் சாமியார்களுக்கு மத்தியில், சுவாமி சிவானந்தா  எந்த ஆடம்பரமுமின்றி வாரணாசியில் எளிமையாய் ஒரு 600 சதுரடி வீட்டில் குடி இருக்க்கின்றார். அந்த வீடும் இவரது பக்தர்கள் நன்கொடையாய் அளித்ததாகும். இவரைப் பக்தர்கள் எந்த நேரமும் சந்திக்கலாம். அவர் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகின்றார்.
பிறப்பு:
சிவானந்தா கோஸ்வாமி நான்கு வயதாய் இருந்தபோது அவரது பெற்றோர் இறந்து விட்டனர். இவரது சகோதரி, இவருக்காகப் பிச்சை எடுத்து உணவு ஊட்டி உள்ளார். அவரும் இரண்டு ஆண்டுகள் கழித்து இறந்து விட்டார். இவரது உறவினர்கள் ஒரு குருஜியிடம் சிவானந்தாவை ஒப்படைத்தனர். குருஜி அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்று கடைசியில்  சிவானந்தா வாரணாசியில் 1979ம் ஆண்டு நிரந்தரமாய் தங்கினார்.
சிவானந்தா ஆயுள் ரகசியம் என்ன?
சுவாமிக்கு வயதானதிற்கு ஒரே அடையாளமாய் அவரது அனைத்துப் பற்களும் விழுந்துவிட்டன. எனவே, வேகவைத்த அரிசியை கஞ்சியாய் அரைத்து உண்கின்றார். அதனுடன், சில பச்சை மிளகாய்களைக் கடித்து இரு வகைப் பருப்புகளையும், வேகவைத்த காய்கறிகளையே அன்றாட உணவாய் உட்கொள்கின்றார்.
நவீன கலாச்சாரத்தின் காரணமாக ஃபாஸ்ட் ஃபுட்  உண்டு  சிறு வயதிலேயே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் நமக்கெல்லாம் சுவாமி சிவானந்தா  நல்ல முன்மாதிரியாய்  திகழ்கின்றார்.