புதுடெல்லி:

இந்தியாவின் 15-வது பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இருந்தாலும், கடந்த முறையைப் போல் இம்முறையும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

வழக்கமாக புதிய அரசு பதவியேற்பு விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும்.
அங்கு 500 பேர் மட்டுமே பங்கு பெற முடியும். வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் பங்கேற்க இருப்பதால், குடியரசுத் தலைவர் மாளிகையின் முற்றத்தில் பதவியேற்பு விழா நடந்தது.

மோடிக்கும் அவரது அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிராமணமும் செய்து வைத்தார்.
25 கேபினட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 9 பேரும், இணை அமைச்சர்கள் 24 பேரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

வாய்ப்பு கிடைக்காதவர்கள்

சுஷ்மா ஸ்வராஜ், சுரேஷ் பிரபு, ஜே.பி. நட்டா, மகேஷ் சர்மா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகியோருக்கு இம்முறை அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படவில்லை.
சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படாததற்கு அவரது உடல்நிலை முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை. அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, சிறப்பாக பணியாற்றினார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தவர்.
2004&2014 வரை எதிர்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியில் பரம எதிரியான பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மகன் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். அவருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

மத்திய கேபினட் அமைச்சர்கள்

1. நரேந்திர மோடி ( பிரதமர்)
2. ராஜ்நாத் சிங்
3. அமித்ஷா
4. நிதின் ஜெய்ராம் கட்கரி
5. சதானந்த் கவுடா
6. நிர்மலா சீதாராமன்
7. ராம் விலாஸ் பஸ்வான்
8. நரேந்திர சிங் டோமர்
9. ரவி சங்கர் பிரசாத்
10 ஹர்சிம்ராட் கவுர் பதால்
11. தாமர் சந்த் கெலாட்
12. டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்
13. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்
14. அர்ஜுன் முண்டா
15. ஸ்மிருதி இராணி
16. டாக்டர் ஹர்சவர்தன்
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பியூஸ் கோயல்
19. தர்மேந்திர பிரதான்
20 முக்தர் அப்பாஸ் நக்வி
21. பிரஹலாத் ஜோஷி
22. மகேந்திர நாத் பாண்டே
23. அர்விந்த் சாவந்த்
24. கிரிராஜ் சிங்
25. கஜேந்திர சிங் செகாவத்

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

1. சந்தோஷ் குமார் கங்வார்
2. ராவ் இந்திரஜித் சிங்
3. ஸ்ரீபாட் யெஸ்போ நாய்க்
4. டாக்டர் ஜிதேந்திர சிங்
5. கிரன் ரிஜ்ஜு
6. பிரஹலாத் சிங் பட்டேல்
7. ராஜ்குமார் சிங்
8. ஹர்தீப் சிங் புரி

இணை அமைச்சர்கள்

1. ஃபக்கன்சிங் குலாஸ்டே
2. அஸ்வினி குமார் சௌபே
3. அர்ஜுன் ராம் மேஹ்வால்
4. ஜெனரல் (ஓய்வு வி.கே.சிங்)
5. கிரிஷன் பால்
6. தார்வோ ராவோசாஹேப் தண்டாரோவ்
7. கிஷன் ரெட்டி
8. பர்ஷோத்தம் ருபாலா
9. ராம்தாஸ் அத்வாலே
10. சத்வி நிரஞ்சன் ஜோஷி
11. பாபுல் சுப்ரியோ
12. சஞ்சீவ் குமார் பல்யான்
13. தோட்ரே சஞ்சய் ஷம்ராவோ
14. அனுராக் சிங் தாக்கூர்
15. அங்காடி சுரேஷ் சன்னபஷப்பா
16. நித்தியானந்த் ராய்
17. ரத்தன் லால் கட்டாரியா
18. வி. முரளீதரன்
19. ரேணுகா சிங் சருட்டா
20. சோம் பர்காஷ்
21. ராமேஷ்வர் தேலி
22. பிரதாப் சந்திர சாரங்கி
23. கைலாஷ் சவுத்ரி
24. தேபஸ்ஸ்ரீ சவுத்ரி

மாநில வாரியாக அமைச்சர்கள்

அருணாச்சல பிரதேசம்-1
அசாம்-1
பீகார்- 5
சட்டீஸ்கர்-1
டெல்லி-1
கோவா-1
குஜராத்-3
ஹரியானா-3
இமாச்சல பிரதேசம்-1
ஜம்மு காஷ்மீர்-1
ஜார்கண்ட்-2
கர்நாடகா-4
மத்திய பிரதேசம்- 5
மகாராஷ்ட்ரா- 8
ஒடிசா-1
பஞ்சாப்-2
ராஜஸ்தான்-3
தெலங்கானா- 1
உத்திரப்பிரதேசம்-9
மேற்கு வங்கம்-2

உத்திரப்பிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக 9 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

20 புதுமுகங்கள்

அமைச்சர்களாக பதவியேற்றவர்களில் 20 பேர் புதுமுகங்கள்.சிவசேனாவைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், அரவிந்த் சாவந்த், வெளியுறவுத்துறை செயலராக இருந்த எஸ்.ஜெய்சங்கர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங், அர்ஜுன் முண்டா, பிரகலாத் ஜோஷி ஆகிய கேபினட் அமைச்சர்களும், கிஷன் ரெட்டி, சஞ்சய் சாம்ராவ் தோட்ரே, தேப்ஸ்ரீ சவுத்ரி, கைலாஸ் சவுத்ரி, பிரதாப் சந்திர சாரங்கி,ராமேஷ்வர் தெலி, நித்யானந்த் ராய், ரத்தன் லால் கட்டாரியா, வி.முரளீதரன், ரேணுகா சிங் ஸாருதா, சோம் பர்காஷ், அங்காடி சுரேஷ் சென்னப்பசாபா மற்றும் இணை அமைச்சர்(தனிப் பொறுப்பு) பிரகலாத் சிங்க பட்டேல் ஆகியோர் புதிய முகங்கள் ஆவர்.

முதல் அமைச்சரவை கூட்டம்

இதற்கிடையே, மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.