இன்ஃபோசிஸ் விட்டு விலகியதற்கு இப்போது வருந்தும் நாரயண மூர்த்தி

டில்லி

டந்த 2014ஆம் ஆண்டு, மற்ற நிறுவனர்களின் வேண்டுகோளை மீறி இன்ஃபோசிஸ் நிறுவன சேர்மன் பதவியில் இருந்து விலகியதற்கு இப்போது நாராயணமூர்த்தி வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனம் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தலைமையில் நிறுவப்பட்டது.  அதில் முக்கிய அதிகாரியாக விளங்கியவர் நாராயண மூர்த்தி.  21 வருடங்கள் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர்.  அதன் பின் சேர்மன் ஆக பதவி ஏற்றார்.

இரு முறை சேர்மனாக பணியாற்றியவர் மீண்டும் அக்டோபர், 2014ல் சேர்மன் பதவி அளிக்கப்பட்ட போது அதை மறுத்து வெளியேறினார்.  அவருடன் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த நண்பர்கள் விலககூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.  ஆனால் அதையும் மீறி விலகினார்.

கடந்த சில மாதங்களாகவே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் போக்கு சரியில்லை என வெளிப்படையாகவே விமரிசித்து வருகிறார் நாராயணமூர்த்தி.  நிறுவன மேலாண்மை, அதிகாரிகளின் ஊதியம், பழைய ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை போன்றவை அவருடைய விமரிசனத்துக்கு உள்ளானது.

முதன் முதலாக சர்வதேச அளவில் மென்பொருட்களை விற்ற நிறுவனம் இன்ஃபோசிஸ் என்பதை நினைவு கூர்ந்த அவர், இன்றும் தான் தினமும் அலுவலகத்துக்கு சென்று வருவதாக கூறினார். நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து தான் விலகியதற்க்காக வருத்தம் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.


English Summary
Narayanamoorthy regrets now for leaving infosys as Chairman