கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை : மனோகர் பாரிக்கர்

னாஜி

கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தேவைப்பட்டால் பெல்காம் போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

கோவா சட்டசபையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மனோகர் பாரிக்கர். ”கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை.  தேவைப்பட்டால் பெல்காம் அல்லது வேறு எங்கிருந்தாவது வரவழைக்கப்படும். மேலும் வரவழைக்கப்படும் மாட்டு இறைச்சி முழுமையான பரிசோதனைக்குப் பின்பே வரவழைக்கப்படும்” எனக் கூறினார்.

இந்த செய்திய டிவிட்டரில் ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது.  அதில் நெட்டிசன்கள் மனோகர் பாரிக்கரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.


English Summary
Goa cm assures that if there is shortage of beef it will be brought from outside