நாகர்கோவில்: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்னோவா சம்பத் இன்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத் பல்வேறு கட்சிகளை கடந்து, தற்போது திமுகவில் இருந்து வருகிறார்.  இலக்கியவாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்தக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை  கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு  மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நெஞ்சுவலி காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.