சென்னை:

மிழகத்தில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. இதையடுத்து, அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுதெரிவித்து உள்ளன.

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குனேரி தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது.

‘இந்த நிலையில், 2 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் சரத்குமார் அறிவித்து உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் ஆதரவு கேட்டதன் அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பதாக சரத் குமார் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு கோரி சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி ஜெயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து தேமுதிக அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளது.