டிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரை திரை மறைவில் இருந்து இயக்கி தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலையை ஆடிட்டர் குருமூர்த்தி உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார் நந்தினி. இந்த நிலையில் இன்று தனது தந்தையுடன் குருமூர்த்தியின் சென்னை மயிலாப்பூர் வீட்டை முற்றுகையிட முயன்றார்.

முன்னதாக இதை எதிர்பார்த்து அங்கு கடுமையான காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆகவே உடனடியாக நந்தினியையும் அவரது தந்தை ஆனந்தனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, மத்திய பாஜக அரசு எதை செய்ய உத்தரவிடுகிறதோ, அதனை நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு உத்தரவிடுவார். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள். தமிழக அரசை ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி மறைமுகமாக இயக்கி வருதாக நந்தினி தெரிவித்தார்.