சென்னை:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகள் சார்பிலும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை வரும் 7-ம் தேதி திருச்சி அருகே உள்ள முக்கொம்புவில் தொடங்குவதாக அறிவித்து உள்ளார்.

இந்த  காவிரி உரிமை மீட்பு போராட்ட பயணத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் பங்கேற்கின்றன.

திருச்சியில் தொடங்கும் இந்த போராட்டம் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம்  நடைபெற உள்ளது.

இந்த பயணத்திட்டம் குறித்து ஆலோசிக்க நாளை மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.