மதுரை:

து விலக்கு உட்பட பல கோரிக்களை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஆனந்தனை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஆனந்தன்.  இவர் மது விலக்கு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நாளை சென்னை வரும் பிரதமர் மோடியிடம், “ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞருக்கு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது?” என்று கேட்கும் போராட்டத்தை அறிவித்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு வந்த மதுரை காவல்துறையினர் நந்தினியையும் அவரது அப்பா ஆனந்தனையம் கைது செய்தனர்.

 

[youtube-feed feed=1]