டில்லி
மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவக் காப்பீடு திட்டத்தின் உட்கட்டமைப்பை வடிவமைக்கப் போவது யார் என்னும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மிகப் பெரிய திட்டம் மக்கள் மருத்துவக் காப்பீடு திட்டமாகும். மோடிகேர் எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் நாடெங்கும் உள்ள பல கோடி மக்கள் பயன் பெற உள்ளனர். இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சுமார் ரூ.5 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இதற்கான ஐடி இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் என அழைக்கப்படும் தொழில்நுட்ப உள் கட்டமைப்பை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.
இதை நந்தன் நிலெகனி அமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே மத்திய அரசின் ஆதார் மற்றும் ஜி எஸ் டி திட்டத்துக்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பு உட்பட பல அரசுப் பணிகளை திறம்பட செய்துள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் ஒரு செய்தி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப் பட்டுள்ளது.