பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இன்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் 5 வீட்டுக்கு இன்று கமல்ஹாசன் வந்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ வீடியோவில் மொத்தம் 17 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். நமீதா மாரிமுத்து மட்டும் அங்கு இல்லை.

திருநங்கைகள் படும் கஷ்டங்களை பற்றி அவர் கூறியது பிக் பாஸ் ரசிகர்களையும் எமோஷ்னல் ஆக்கியது. தற்போது முதல் வாரத்திலேயே நமீதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.