அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட நமீபிய அணி தகுதி பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ள நமீபியா அணி ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

நமீபியாவில் நடைபெறும் இந்த தகுதிச் சுற்று போட்டிகளில் நமீபியா, ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா, தன்சானியா ஆகிய ஐந்து அணிகள் மோதி வருகின்றன.

மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என 19 நாடுகள் 2024 டி 20 உலகக்கோப்பையில் விளையாட இதுவரை தகுதி பெற்றுள்ளன.

மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ள நிலையில் மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.