தமிழகத்தில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு மூன்றாம் இடம்

Must read

சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது.,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.  இதுவரை வெளியான தகவலின்படி திமுக அதிக இடங்களில் முன்னிலையிலும் இரண்டாவதாக அதிமுக முன்னிலையிலும் உள்ளன.

கடந்த 2010 ஆம் அண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் போட்டியிடவில்லை.   2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 1.07% வாக்குகள் பெற்று 9ஆம் இடத்தில் இருந்தது.

அதன் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் சிறிது சிறிதாக அதிகரித்தது.  தற்போதைய சட்டப்பேரவை தேர்தலில் தனித்து இக்கட்சி களத்தில் உள்ளது.   தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

More articles

Latest article