சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற  இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கான விருது தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் சேர்த்து, அதை  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். மேடையிலேயே அவர் விருது தொகையை அரசு நிவாரண நிதிக்கு வழங்கிய நிகழ்வு வெகுவாக பாராட்டப்பட்டது. அதுபோல, சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.

75-வது சுதந்திர தினத்தையொட்டி புனித சார்ஜ் கோட்டையில் 2வது ஆண்டாக இன்று தேசிய கொடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து,  பிறகு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, தகைசால் தமிழர் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்ததலைவர் நல்லகண்ணுவுக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 2022-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

அப்போது, தகைசால் தமிழர் விருது பெற்ற நல்லக்கண்ணுக்கு தனக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தோடு சேர்த்து ரூ.5 ஆயிரத்தையும் தன்னுடைய நிதியாக சேர்த்து,  தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, அதே மேடையிலேயே முதலமைச்சரின் வழங்கினார். மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மனித நேயம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அப்துல் காலம் விருது முனைவர் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கு வழங்கப்பட்டது. ச.இஞ்ஞாசிமுத்து பாளையக்கோட்டை தூய சசேவியர் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

நாகை கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

குளத்தில் மூழ்கிய சிறார்களை காப்பாற்றிய செயலுக்காக எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

உங்கள் தொகுதியில் முதல்வர் விருது லட்சுமி ப்ரியாவுக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்த உதகை அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெய்கணேசமூர்த்திக்கு விருது வழங்கப்பட்டது.

அறிவுசார் குறைவுடையவர்களுக்கான சிறப்பு பள்ளியை செயல்படுத்தும் ரெனேசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி நலனுக்காக பணியாற்றிய அமுதசாந்திக்கு சிறந்த சமூக பணியாளர் விருது வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றுத்திறனாளி நலனுக்கான விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லுபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்தது.

சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், ஸ்ரீவில்லுபுத்தூர் நகராட்சிக்கு ரூ.15 லட்சமும், குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சம், தென்காசி நகராட்சிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு கருங்குழி பேரூராட்சிக்கு ரூ.10 லட்சமும், கன்னியாகுமரிக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் இளைஞர் விருது விஜயகுமார், முகமது ஆசிக், வேலூர் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

நாகையை சேர்ந்த சிவரஞ்சனிக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது.