சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான சிறையில் உள்ள நளினி, முருகன் தம்பதி, 30 நாள்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர். இவர்களை விடுதலை  செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்தியஅரசு விடுதலை செய்ய மறுத்து வருகிறது. இவர்கள்  7 பேரையும்  விடுதலை செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் கடந்த வாரம் தமிழக அரசிடம் 30 நாட்கள் பரோல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன் தம்பதி தங்களுக்கும் 30 நாள்கள் பரோல் வேண்டும் என  தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.‘ அந்த கடிதத்தில்,  சென்னையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய் பத்மாவதியை கவனித்துக்கொள்ள 30 நாள் பரோல் தேவை என நளினி  கோரிக்கை விடுத்துள்ளார்.