சென்னை :

நீட் குழப்படிகளால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணத்தைக் கண்டித்து, நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிடப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் சார்பில் வழக்கறிஞராக நளினி சிதம்பரம் வாதாடினார். இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி மனு போட்டு டில்லி சென்று போராடியவர்களில் மாணவி அனிதாவும் ஒருவர். நீட் தேர்வில் விலக்கு கிடையாது என்பதால் மருத்துவ கனவு சிதைக்கப்பட்ட துக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல்வேறு போராட்டங்கள் தமிழகம் முழுதும் நடந்து வருகின்றன. இந்த  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நளினி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பினர், “ அனிதாவின் இழப்பு வாய்ப்பு கிடைக்காத மாணவி இயலாமையால் செய்து கொண்ட தற்கொலை கிடையாது. அகில இந்திய அளவில் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நீட் தேர்வை 15 சதவீதம் மாணவர்கள் கூட தேர்ச்சி பெறாத நிலை. சிறந்த  கல்வித்தரம் இல்லாத நிலையில் நீட் தேர்வை அனுமதித்தது தவறு. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களுக்கு கிடைக்கவில்லை. அதிலும் நகர்ப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

நீட் தேர்விற்கு விலக்கு இப்போது கிடைத்து விடும் என்று சொல்லியே வந்த அரசு இறுதியில் கைவிட்டுவிட்டது. இதைத் தாங்க முடியாமலேயே அனிதாஅ தற்கொலை செய்து கொண்டார்.  இதைக் கண்டித்துத்தான் நளினி சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்” என்றனர்.

மேலும், “இனி வரும் காலத்தில் நீட் தேர்வுக்காக அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க முடிவு செய்திருக்கிறோம்.
நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராதீர்கள், மேலும் இரு  வாய்ப்பு உள்ளது” என்றும் தெரிவித்தனர்.