நாகை: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் மாநில முதல்வரே இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரிவில்லை. மேலும், இதுபோன்ற மேற்குவங்க அரசு இயற்றிய தீர்மானத்துக்கு அதிகாரமில்லை உச்சநீதிமன்றமும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நாகையில் மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

நாகப்பட்டினத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தர் மற்றும் மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை.
மேலும் பட்டமளிப்பு விழா அழைப்பிதலில் தனது பெயர் இடம் பெறவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதுபோல, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்திய ஆளுநர், அங்குள்ள பிரபலமான வேளாங்கண்ணி ஆலயத்திற்கும் சென்று வழிபாட்டில்,.

நேற்றைய நிகழ்விலும் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளாத நிலையில், இன்றைய பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]