புதிய கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறியது நாகாலாந்து…!

Must read

கோஹிமா: நாகாலாந்தில் முதல் முறையாக புதிய கொரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை.

அம்மாநிலத்தில் மே 25ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனா பாதிப்பு தொடக்கம் முதலே குறைவாக இருந்த நாகாலாந்தில், அந்த தொற்றில் இருந்து மீள்வோர் விகிதம் 96.14 சதவீதமாக இருந்தது. இதுவரை 23 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

நாகாலாந்தில் இதுவரை 11,897 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 251 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 11,438 பேர் குணமடைந்துள்ளனர். 78 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

மே 25ம் தேதிக்கு பிறகு டிசம்பர் 27ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.

More articles

Latest article