சென்னை: நாகை வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக செப்டம்பர் 5ந்தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்து உள்ளது. வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே இரண்டு நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,  தாம்பரத்திலிருந்து செப்டம்பர்.5 -ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06031) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06032) வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பர் 6 -ஆம் தேதி காலை 8 .50 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும்.

இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஆக.2) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.