கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் சுமன் டிவி , யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில் சமந்தாவை பிரிவதாக அறிவித்த பிறகு முதல்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நாக சைதன்யா.

அந்த வீடியோவில் கம்மத்தை சுற்றியிருக்கும் கிராமங்களை சேர்ந்த மக்களும், ரசிகர்களும் Most Eligible Bachelor படத்தின் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார் நாக சைதன்யா.

மேலும் லவ் ஸ்டோரி மற்றும் Most Eligible Bachelor ஆகிய படங்களை வெளியிடும்போது நிறைய தயக்கம் இருந்தது. படம் எப்படி ஓடும், வசூல் எப்படி இருக்கும் என்று பயம் இருந்தது. ஆனால் படம் ரிலீஸானதும் நீங்கள் அமோக வரவேற்பு கொடுத்தீர்கள். நாங்கள் ரிலீஸ் தேதியை மாற்றியும் நீங்கள் ஆதரவளித்தீர்கள் என்றார்.