சென்னை:
டிகர் கமலஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்ததற்கு ரஜினி வாழ்த்து கூறி உள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த விருதுக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா உலக பிரபலங்கள் கமலை வாழ்த்தி வரும் வேளையில், நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டரில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து யார் இந்த குழந்தை என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்.
அதே ஆச்சர்யங்களுடன் 60 வயதை கடந்து இன்றும் 16-ஆக இன்றைய இளைய தலைமுறையினர் உடன் சமமாக பயணிப்பவர் கமல்ஹாசன். சினிமாவின் சகலகலா வித்தகரான கமலுக்கு பல பட்டங்கள், அங்கீகாரங்கள், கவுரவங்கள் கிடைத்துள்ள போதிலும் தற்போது பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது கமலை இன்னும் மேலே உயர்த்தியுள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டரில். நடிகர் ரஜினிகாந்த்தும் தன் நண்பர் கமலுக்கு டுவிட்டர் வாழ்த்து தெரிவத்துள்ளார்.ரஜினி விடுத்துள்ள டுவிட்டர் வாழ்த்து செய்தியில், ”எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழில் ‘செவாலியே’ பெறும் 2வது நடிகர் கமல்
தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த உயரிய விருது மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது.
இந்தியாவில் இந்த விருதை சினிமா பிரபலங்களான நான்கு பேர் இதுவரை பெற்றுள்ளனர். ஐந்தாவதாக இந்த விருதுப் பட்டியலில் கமல் தற்போது இணைந்துள்ளார்.
இதேபோல், தமிழில் இந்த விருது கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் கமல் பெற்றுள்ளார்.
இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைப்பிரபலங்களின் விபரமாவது:

  • 1987ம் ஆண்டு வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே
  • 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
  • 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்
  • 2014ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்
  • 2016 ஆண்டு நடிகர் கமல்ஹாசன்
  • 5-seveliyes