திரைவிமர்சனம்: நாச்சியார்

Must read

நாச்சியார்

ழக்கமான பாலா பாணி குரூரங்கள் வெகுவாக குறைந்திருக்கும் படம் என்பதை முதல் வரியிலேயே சொல்வது அவசிம்.

பெற்றவர்கள் யாரென்றே தெரியாத அநாதை ஜி.வி. பிரகாஷ், திருமணங்களுக்கு சமையல் செய்யும் காண்ட்ராக்டரிடம் எடுபிடியாக இருக்கிறார். ஒருமுறை, சமையல் வேலைக்குப் போகும்போது, அங்கு கல்யாண வீட்டில் வேலை பார்க்கும் இவானாவைச் சந்திக்க.. இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒருநாள் இருவரும் நெருங்கிப் பழகிவிடுகிறார்கள்.

இவானா கர்ப்பமாகிறார். இதை அறிந்த பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். ஜோதிகாதான் காவல்துறை அதிகாரி. அவர் ஜி.வி.பிரகாஷை பிடிக்கிறார்.

நாச்சியார்

இருவரும் பரஸ்பரம் விரும்பித்தான் நெருங்கியருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆனாலும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் ஜீ.வி.பிரகாஷ். இவானாவை, ஜோதிகாவே தன்பாதுகாப்பில் தன் வீட்டிலேயே வைத்துப் பாதுகாக்கிறார். இவானாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்யும்போதுதான், அது ஜீ.வி. பிரகாஷ் குழந்தை இல்லை என்பது தெரியவருகிறது.

அந்தக் குழந்தைக்கு காரணமானவன் யார்.. என்பது மீதிக்கதை.
நேர்மையான காவல்துறை அதிகாரி நாச்சியாராக வருகிறார் ஜோதிகா. நெஞ்சில் துணிவும் நேர்கொண்ட பார்வையுமாக மிரட்டுகிறார். அதே நேரம், என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் கண்டவரையும் அடித்து துவம்சம் செய்வது ஓவர்.
பாவப்பட்ட சமையற்கார இளைஞனாக ஜீ.வி.பிரகாஷ். தனது வயதே தெரியாத அப்பாவி. சிறப்பாக  . நடித்திருக்கிறார். குறிப்பாக, காதலியிடம் கொஞ்சும் இடங்களில்ரசிக்கவைக்கிறார்.

அவருக்கு ஜோடி இவானா. அறிமுக நாயகி. அழகு. அதோடு அசத்தல் நடிப்பு. தொடர்ந்து இதே போல நல்ல கேரக்டர்களில், நல்ல இயக்குநர்கள் படங்களில் நடித்தால் சிறப்பான எதிர்காலம் உண்டு என ஜோசியம் சொல்லலாம்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பு. சேசிங் காட்சிகளில் மிரள வைக்கிறார்.
இசை இளையராஜா.

பாலா படங்கள் என்றாலே கொடூர காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் இந்தப்படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் குறைவு. அதே நேரம் கடைசி உச்சகட்ட காட்சி, பாலா ஸ்டைல்தான். ஆனாலும் “அது” சரியென்றே தோன்றுகிறது.
மொத்தத்தில் ரசிக்கவைத்திருக்கிறார் பாலா.

More articles

Latest article