தனுஷ் – செல்வராகவன் கூட்டணி ‘நானே வருவேன்’ என்ற படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தை தாணு தயாரிக்க, செல்வராகவன் இயக்க, தனுஷ் நடிக்கிறார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற மாஸ்டர் பீஸ்களில் செல்வராகவனுடன் இணைந்து நின்ற யுவனும், ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவும் நானே வருவேனில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கான பணிகளில் இயக்குநர் செல்வராகவன் முழுவீச்சில் ஈடுபட்டுவரும் நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் பெயரில் படக்குழு மாற்றம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.