ஈரோடு:   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அருந்ததியர் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட  வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஈரோடுகிழக்கு தொகுதியில்ஈவேரா தமிழ்மகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவர் உடல்நலக்குறை காரணமாக உயிரிழந்த நிலையில், அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில் அவரது தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த    இடைத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீத;ன என்பவர்  போட்டியிட்டர். அவரது  ஆதரவாக, 2023ம் ஆண்டு  பிப்ரவரி 13 ஆம் தேதி ஈரோடு திருநகர் காலனியில்  நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்   அருந்ததியர் சமூகம் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது விஜயநகரப் பேரரசு ஆட்சியில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என பேசியிருந்தார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அருந்ததியர்கள் என சீமான் பேசியிருந்தார்.

இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து, பட்டியலின அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐபிசி 153B(1)(c) 505(1)(c), 506(1) உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு  ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணைக்கு  ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி கடந்த மாதம் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கில் ஜாமின் கோரி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.