சென்னை,

திமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து பெரும்பாலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர். குறைந்த அளவிலான சட்டமன்ற உறுப்பினர்களே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கின்றனர்.

இந்நிலையில் மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வாக நட்ராஜ் ஐபிஎஸ் எந்த பக்கமும் சாயாமல் ஒதுங்கி இருந்தார். இதன் காரணமாக அவரை காணவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில்,

நான் தலைமறைவாகவில்லை,  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்தான் இருக்கிறேன் என்று கூறினார். மேலும், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மக்கள் முதல்வராக ஏற்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளதால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து, பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நட்ராஜ் ஐபிஎஸ் தெரிவித்து உள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு தொகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.