டில்லி

மைலான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உள்ள ஹெபடைடிஸ் சி நோய்க்கான மருந்தை இந்தியாவில் விற்கக் கூடாது என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

ஹெபடைடிஸ் சி என்னும் கல்லீரல் அழற்சி நோயால் கல்லீரலில் வீக்கம் உள்ளிட்டவை  ஏற்படும் இரத்தத்தின் வழியாக பரவும் இந்த நோய் ஒரு தொற்று நோயாகும்.   இந்த நோய் அதிக நாள் இருக்கும் போது அதனால் புற்று நோய் ஏற்பட வழி உண்டு.    இந்த நோய் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.  இந்த நோய் மக்களைப் பெரிதும் அச்சுறுத்தும் நோய் ஆகும்..

இந்த கல்லீரல் அழற்சி நோய் இந்தியாவில் அரியான, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.  அத்துடன் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் ஓரிரு இடங்களில் உள்ளது.   கடந்த 2013 முதல் இந்த நோயால் சுமார் 25000 பேர் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.  இவர்களில் 1450 பேர் அரியானா மாநிலத்தை சேர்ந்த்வர்கள  ஆவார்கள்

ஏற்கனவே இந்த நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டும் குணமாகாத நோயாளிகளுக்காக புதிய மருந்து ஒன்றை இந்தியாவில் உள்ள மைலான் நிறுவனம் தயாரிக்க உள்ளது.   இது குறித்து மைலான் நிறுவனம்  அமெரிக்காவைச் சேர்ந்த மருந்துகள் காப்புரிமை அமைப்புடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய நாட்டில் இந்த மருந்துகள் தயாரிப்பதற்கு மட்டுமே உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மருந்தை 96 நாடுகளில் விற்க இந்த அமைப்பு மைலான் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது.  அதில் இந்தியா இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்தை இந்திய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இந்தியாவில் மைலான் நிறுவனத்தின் மருந்துகளில்  பாதிக்கும் மேல் தயாரிக்கப்படுகிறது.  இதில் 15000 இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இது குறித்து ரோதக்கில் உள்ள அரியானா பட்ட மேற்படிப்பு கல்வி நிலைய பேராசிரியர் பிரவின் மல்கோத்ரா, “ஹெபடைடிஸ் சி நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.   இந்த நோய்க்கான மருந்தை தயாரிக்கும் இந்தியர்களால் அதைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது   அரியானா மாநிலத்தில் மட்டும் 5% மக்கள் இந்த நோயால் பாதிக்காட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெண் மருத்துவரான லீனா, “இந்த ஒப்பந்தம் மிகவும் தவறானது மட்டுமின்றி மிகவும் அநியாயமானதாகும்.   இந்திய நாட்டை மருந்துகள் தயாரிக்கப்  பயன்படுத்தி விட்டு இந்தியர்களுக்கு அந்த மருந்தின் பலன் கிடைக்காது என்பது மிகவும் தவறானதாகும்.    அதாவது ஒரு நாட்டில் மருந்து தயாரிக்கும் போது அந்த நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்னும் தார்மீக உரிமையை இந்த ஒப்பந்தம் மீறி உள்ளது.  இதை இந்திய அரசு எதிர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.