டெல்லி வன்முறையின்போது பாதிக்கப்பட்ட வீரர் அனிஸ்-க்கு பிஎஸ்எஃப் ரூ.10 லட்சம் உதவி!

Must read

டெல்லி:

லைநகர் டெல்லியின் வடக்குப்பதியில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, ஏராமானோர் வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில், பிஎஃஎப் வீரர் முகமது அனிஸ் என்பவரது வீடும் தீக்கிரையானது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிஎஸ்எஃப் (எல்லை பாதுகாப்பு படை) நிர்வாகம் அனிஸ்-க்கு ரூ.10 லட்சம் உதவி அளித்து உள்ளது.

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள், பலரது வாகனங்கள் எரிக்கப்பட்டன.

இந்த வன்முறையின்போது, எல்லை பாதுகாப்புபடை வீரர் முகமது அனிஸ் என்பவரின் வீடும் வன்முறையாளர்களால் எரிக்கப்பட்டு, சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த எல்லைபாதுகாப்பு படை நிர்வாகம், கான்ஸ்டபிள் அனிஸ் வீட்டை புதுப்பிக்க அவரிடம் ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளது.

More articles

Latest article