மைசூரு:

றைந்த நடிகர் அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா, மாண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது, தனக்கும், மகன் அபிஷேக் கவுடா, தனக்காக  பிரசாரம் செய்து வரும்  நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் உயிருக்கு குமாரசாமி கட்சியினரால்  ஆபத்து இருப்பதாக  குற்றம் சாட்டி உள்ளார். இது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

மாண்டியா தொகுதி அம்பரீஷ் 3 முறை வென்ற தொகுதி. சில மாதங்களுக்கு முன்பு அம்பரீஷ் மரணம் அடைய, அந்த தொகுதியில், அம்பரீசின் மனைவி சுமலதாவுக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு  வாய்ப்பு கிட்டவில்லை.

இதற்கிடையில் மாண்டியாவில் சுமலதா போட்டியிட வேண்டும் என அம்பரீஷ் ரசிகர்கள் வலியுறுத்த சுமலதாவும் களத்தில் குதித்து விட்டார்.  சுமலதாவுக்கு  பெரும்பாலான கன்னட நட்சத்திரங்கள் சுமலதாவுக்கு ஆதரவாக உள்ளனர். உள்ளூர் காங்கிரசாரும் சுமலதா பக்கம் தான் இருக்கிறார்கள். பாஜகவும் தனது ஆதரவை சுமலதாவுக்கு தெரிவித்து உள்ளது.

சுமலதாவை எதிர்த்த்து, கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் இந்த தொகுதியின் வேட் பாளராக  நிற்கிறார்.  மாண்டியா தொகுதியில் ஒக்கலிகர் சமுதாய வாக்காளர்கள் பெருமளவில் உள்ளது. அம்பரீஷ் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால் சுமலதாவுக்கு அந்த சமுதாயத்தினர் வாக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாண்டியாவில் பிரசாரம் செய்த நடிகை சுமலதா,  எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் , நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோருக்கு அச்சுறுத்தல் வருகிறது என்றும், தங்களை முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது  ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினருக்கும், நடிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.  தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சி யினரை அச்சுறுத்தி வருகிறார். எனவே எனது உயிருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.

இவ்வாறு அவர்  பேசினார்.  சுமலதாவின் பேச்சு கர்நாடக அரசியலில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.