சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழாவில் கலந்துகொண்ட முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரையும் இலக்காக கொண்டு நான் செயல்படவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்து செயல்படுகிறேன் என கூறினார்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில், 44 மருத்துவமனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மற்றும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் உள்ளிட்ட ‘ஏற்றமிகு 7 திட்டங்களை’யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்த திட்டங்களில் மிக முக்கியமாக காலை உணவுத் திட்டம் மேலும் 500 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படும் என்பது அனைவராலும் வரவேற்கும் திட்டமாக அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரையில் கடந்த செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். பொங்கல், கேசரி, ரவா கிச்சடி, சேமியா உப்புமா என பல வகையான உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதால் இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் காலை உணவுத் திட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை மேலும் 500 பள்ளிக்கூடங்களுக்கு விரிவாக்கம் செய்ய அடுத்த கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டதால் மேலும் 500 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வந்தாலும் இப்போது 4308 மருத்துவர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் ரூ.2000 கோடி செலவில் அமைக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகளில் ரூ.1,136 கோடி மதிப்பில் 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமான பணிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இ
அப்போது, ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினேன். இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனர்.
இலவச பேருந்து பயணம் மூலம் பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை பெற்றுள்ளனர். இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் சமூக பாதுகாப்பு திட்டங்கள். தமிழகத்திற்கு ஏராளமான தொழில் முதலீடுகள் வந்துள்ளன.
ஓராண்டுக்கு காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களால் தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. நாளை 70-வது பிறந்தநாள், சுமார் 52 ஆண்டு காலம் அரசியலுக்காக வாழ்க்கையை அர்பணித்துள்ளேன். யாரையும் இலக்காக கொண்டு நான் செயல்படவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்து செயல்படுகிறேன்.
தினந்தோறும் திட்டம் தீட்டுவது தான் எனது பணி. தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும்.
திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இதுவரை அரசால் வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து, ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கியது. அனைத்து குழந்தைகளும் ஊட்டச்சத்து பெற்ற குழந்தைகளாக வளர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தவர் கலைஞர். மாநிலங்கள் என்பது எல்லைகளால் உருவானது அல்ல, எண்ணங்களால் உருவானது என தெரிவித்தார்.
அதேபோல் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக “முதலமைச்சர் காலை உணவு திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் பள்ளியில் மாணவ மாணவிகளின் இடைநிற்றல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத்துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம், சிற்பி திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், புதுமைப்பெண் உயர் கல்வி உறுதி திட்டம், விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயண சலுகை, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், கள ஆய்வில் முதல்வர் திட்டம், தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம், வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டம், ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம், மதுரையில் கலைஞர் நூலகம், அயலக தமிழர்கள் நல வாரியம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் விரிவாக்கமாக ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த 7 திட்டங்கள் பின்ருமாறு..
ஏற்றமிகு ஏழு திட்டங்கள்:
- ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைக்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடக்கம்.
- திருநங்கைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
- தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில் முனைவோர்களாக்க சிறப்பு திட்டம் தொடக்கம்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார்.
- ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
- பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியாமான அணைகளைய் வழங்கினார் முதலமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கீதாஜீவன் சென்னை மாநகராட்சி மேயர், எம்பி, எம்எல்ஏக்கள் அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.