புதுடெல்லி: தற்போது ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டுவரும் விமான சேவை, 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை தொடரும் என்று அறிவித்துள்ளார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில், குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளதாவது, “அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை, ஒப்பந்த அடிப்படையில், பிற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதை பொறுத்துதான் எதிர்காலத்தில், சர்வதேச விமான சேவைகள் அமையும். அதன் அடிப்படையில்தான், இதர நாடுகளும், தங்கள் விமான சேவைகளை முழுவதும் துவக்கும்.
இந்தியாவில் தற்போது, 65% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை விரைவில 75% அளவிற்கு உயர்த்தப்படும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள், உள்நாட்டு விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை சராசரி நிலையை அடைந்துவிடும் என்று நான் நம்புகிறேன்” என்றுள்ளார் அவர்.