டில்லி:

திருவாரூர் இடைத்தேர்தலில், தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத் துக்கு  உத்தரவிட வேண்டும்  என்று உச்சநீதி மன்றத்தில் டிடிவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த சின்னத்தை ராசியான சின்னமாக கருதி, திருவாரூர் இடைத்தேர்தலிலும் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அவர் கேட்கும் சின்னம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளார்.

திருவாரூரில் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தனது கட்சிக்கு குக்கர் சின்னமே ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் அமமுக கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவியின் சென்டி மென்டான குக்கர் அவருக்கு ஒதுக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.