மும்பை:
ஸ்லாமியரின் முத்தலாக் முறை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமிய வழக்கப்படி தலாக்என்ற வார்த்யை மும்முறை உபயோகித்து விவாகரத்து செய்யும் வாய்ப்பு கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில்  18 வயது இஸ்லாமிய இளம்பெண் அர்ஷியா என்பவரம்,மும்முறை தலாக் முறைக்கு தடை விதிக்க பிரதமர் மோடியின் உதவியை நாடியுள்ளார்.

அர்ஷியா தன் குடும்பத்துடன்
அர்ஷியா தன் குடும்பத்துடன்

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த  அர்ஷியா இவருக்கு இரண்டு வருடங்கள் முன்னர், அவரது 16ம் வயதில் திருமணம் ஆனது.   வசதியான காய்கறி வியாபாரி முகமது காசிம் என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்களது திருமண வாழ்க்கை 2 வருடங்களில் முடிவுக்கு வந்தது. முகமது காசிம் மூன்று முறை தலாக் என்று பேப்பரில் எழுதி கொடுத்து திருமண உறவை முறித்துக்கொண்டதாக தெரிவித்துவிட்டார்.
சிறுமியாக இருந்த அர்ஷியா கணவரிடம் பல முறை போராடியும் நியாயம் கிடைக்க வில்லை. தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் சிறுமி அர்ஷியா, கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து அர்ஷியா கூறும்போது, “முத்தலாக் முறையானது என்னை போன்ற எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையை அழித்து விட்டது. என்னைப்போல இந்த தலாக் முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் விதமாக இம்முறைக்கு தடை விதிக்க பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தன்னுடைய கணவரிடம் இருந்து வந்த தலாக் நோட்டீசை ஏற்று கொள்ள போவதில்லை என்றும் இதற்கு எதிராக குடும்ப நல கோர்ட்டிற்கு செல்ல முடிவு எடுத்து உள்ளதாகவும் கூறி உள்ளார்.
அவருடைய தந்தை நிஸ்ஸார், “ பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய மகளை போன்று வேறு எந்த இஸ்லாமிய பெண்ணும் இனி பாதிக்கப்பட கூடாது. என்னுடைய மகளை படிக்க வைக்காமல் திருமணம் செய்து வைத்து மிகப்பெரிய முட்டாள் தனத்தை செய்து விட்டேன்”  என்று தெரிவித்துள்ளார்.