கோபால்கஞ்ச், பீகார்

ரு இந்துச் சிறுவனின் உயிரைக் காக்க தந்து ரம்ஜான் விரதத்தை முறித்துக் கொண்டு ஒஉ இஸ்லாமியர் இரத்த தானம் செய்துள்ளார்.

பீகாரில் உள்ள கோபால் கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ராஜேஷ்.   அவர் ஆபத்தான நிலையில் கோபால் கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அவருடைய தந்தையால் கொண்டு வரப்பட்டுள்ளார்.   சிறுவனுக்கு உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டி இருந்தது.   அந்த மருத்தவமனையின் இரத்த வங்கியில் அந்த சிறுவனுடைய குருப் இரத்தம் இல்லை.

இரத்த வங்கியின் பொறுப்பாளர் அந்த இரத்தம் கிடைக்க இன்னும் 2 அல்லது 3 தினங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.  அதனால் அதிர்ந்து போன தந்தையிடம் அங்குள்ள துப்புறவாளர் அன்வர் உசைன் என்பவர் தனது நண்பர் ஜாவேத் ஆலம் பற்றி தெரிவித்தார்.   அவருக்கும் இந்த சிறுவனின்  குரூப் இரத்தம்தான்.  அவர் அடிக்கடி இரத்த தானம் செய்பவர்,  அதனால் ஜாவேத் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஜாவேத் ஆலம் ரம்ஜான் விரதத்தில் இருந்துள்ளார்.     அதனால் உணவே அருந்தாத ஜாவேத்திடம் இருந்து இரத்த தானம் பெற மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.   சிறுவனின் நிலையைக் கண்ட ஜாவேத் உடனடியாக தனது ரம்ஜான் விரதத்தை முறித்துக் கொண்டு பழ ரசம் மற்றும் சிறிது திட உணவை சாப்பிட்டுள்ளார்.  அதன் பிறகு அவர் இரத்ததானம் செய்து சிறுவனின் உயிரை காத்துள்ளார்.